Pages

Friday, June 8, 2012

இறுதி மணித்துளிகள்


இறுதி மணித்துளிகள்

கடைசி இரண்டு நாட்கள் ஹஜ்ரத் நாகூர் நாயகம் யாரிடமும் பேசவில்லை,  தொழுகுவதும், குர்ஆண் ஓதுவதும் மீதிய நேரத்தில் மெளனமாகவே  இருந்தார்கள். அந்த நாள் வந்தது !! தனது கலீப்பாக்களையும் சீடர்களையும் அழைத்து நல உபதேசம் செய்தார்கள், அந்த கூட்டத்தில் பலர் தேம்பி தேம்பி அழுதார்கள். அழாதீர்கள் ! என்ற வார்த்தை அவர்களது துயரத்தை அதிகரிக்கவே செய்தது, தோழர்களை அருகே அழைத்து கையை இணைத்து சலாம் கூறினார்கள், கண் குளிந்தவர்களாக மேற்குபுறம் திரும்பி பெருமானார் ( ஸல் ) அவர்கள் மீது சலாம் கூறினார்கள்.

பின்பு மைந்தனையும் கலீபாக்களையும் மீண்டும் ஏறெடுத்து நோக்கி அஸ்ஸலாமு அழைக்கும் என்று சொல்லிவிட்டு கண்களை மூடி கொண்டு ஹூ ஹூ என்ற திக்ரில் எல்லாம் வல்ல இறைவனின் சிந்தனயில் மூழ்கினார்கள்.

திக்ரின் வேகம் அதிகரிக்க கடல் அலையின் சப்தம் அறவே குறைந்து, வனத்து மரங்கள் தன் அசைவை மறந்து நின்றன ஹஜ்ரத் நாகூர் ஆண்டகையின் திக்ரு சத்தம் மட்டம் முதுபக்கை நிரப்பியிருந்தது. திடிரென்று யாரோ கதவு தட்டும் சத்தம் பார்வைகள் திரும்பியபோது வாசல் திரை மெதுவாக அசைந்தது, புறா ஒன்று சிறகடித்து  பறந்தது.

அச்சமடைந்த ஹஜ்ரத் செய்யிது முஹம்மது யூசுப் சாஹிப் தாத அவர்கள் தனது தந்தையின் முகத்தை உற்று நோக்கினார்கள். சிரிக்கும் வைகறை சிரிக்கவில்லை.  ஒளிரும் விரிகதிர் ஒளிரவில்லை, குளிரும் தென்றல் குளிரவில்லை, ஹிஜ்ரி 978 ஆம் வருஷம் ஜாமாதுள் ஆகிர் பத்தாம் நாள், வெள்ளிகிழமை இரவு தஹஜ்ஜத் நேரம் ஷாதத்து செய்யதீனா செய்யது அப்துல் காதிரி ஷாகுல் ஹமீத் காதிர் வலி கண்ஜெஷவாயி கஞ்சபக்ஸ் பாதுஷா சாஹிப் நாகூர் ஆண்டகை அவர்கள் புகழுடம்பு எய்தினார்கள். இன்னலில்லாஹி....

அல்ஹம்துலில்லாஹ்.... 

No comments:

Post a Comment