Pages

Friday, June 8, 2012

இறுதிநாளில் நவின்றது



இறுதிநாளில் நவின்றது 

ஒருநாள் இஷா தொழுகை முடிந்து முதுபக் ஷெரிப்பில் அமர்ந்து இருந்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் தமது மகனாரை அழைத்தார்கள். உடல் வாழ்வை தாம் துறக்க வேண்டிய சந்தர்ப்பம் அதிக தொலைவில் இல்லை என்றும், தமது இறுதி நாட்கள் நடந்து கொண்டு இருக்கின்றன என்றும் கூறினார்கள். நொடிபொழுதில் என்ன அலைகள் நெஞ்ச கடலில் குமுறி பொங்கி பொங்கி வாய்விட்டு ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் தாதா நாயகம் அழுதார்கள். மகனே !! எல்லாம் தெரிந்த நீர் அழுவானேன் !! என்றார்கள் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள்.

தந்தையே !! எம் பெருமானார் ( ஸல் ) தம் மரணம் சமீபித்து விட்டது என்பத பல வித குறிப்பாலும் குடும்பத்தினருக்கு உணர்த்தினார்களே அப்படியிருந்தும் இழைப்பை சகிக்காமால் ஹஜ்ரத் உமர் ( ரலி ) கதறி ஆர்ப்பாட்டம் செய்ததை தாங்கள் அறீவீர்கள் !!  என்றார்கள்.

மகனின் நியாய வாதத்தை ஒப்பு கொண்ட ஆண்டகை அவர்கள் இவ்வாறு கூறினார்கள். மரணத்திர்க்காகா யாரும் கவலைபடவேண்டாம் , மரண மாலையை எவரும் அணியாமல் இவ்வுலகில் பிறக்க வில்லை , எனவே கவலை வேண்டாம்.
மேலும் மகனே !! இந்த பூவுடலை விட்டு நான் சென்றதும் என் பூவுடலை வைத்திருக்கும் இடம் சுற்றி திரை கட்டவும், ஆகாச  மார்க்கமாக எல்லாம் வல்ல அல்லா மழையை அனுப்புவான் அதன் மூலம் என் பூவுடலை குளிப்பாட்டி பின் அந்த இடத்தில் ( தற்போதைய பீர் மண்டபம் ) நீர் இமாமாக ஜனாஸா தொழுகை நடத்தி இந்த எழுமிச்சை மரத்தின் கீழ் ( தற்போது ஜியாரத்து இருக்கும் இடம் ) அடக்கம் செய்யும். என கூறினார்கள்.  

இதையெல்லாம் கேட்ட ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் தாதா நாயகம் அழுதார்கள். தந்தையே !! மானிக்கபுரில் உள்ள தனது குடும்பத்தையும் தாங்கள் எனக்கு காட்டவில்லை.. தாங்கள் இல்லை என்றால் இங்கு எனக்கு என்ன வேலை.. நான் குடும்பத்தோடு லாகூர் பக்கம் போக தாங்கள் உத்தரவு கொடுங்கள் என்றார்கள்.  

இதை கேட்ட ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை கூறினார்கள்.. அல்லாஹ்வின் நாட்டத்தை மாற்ற எவருக்கும் நாதியில்லை..  மகனே என்னை மண்ணுக்குள் வைத்த  மூன்றாம் நாள் காலையில் நீர் வந்து எமக்கு சலாம் சொல்லும், என் பதில் சலாம் உமக்கு கேட்டால் உமது தந்தை கண்ணுக்கு மறைந்தாலும் மரணிக்கவில்லை என்று அர்த்தம் , அப்படி கேட்டல் நீரும் உமது சந்ததியினரும் இங்கேயே இருந்து வரலாம். என்னை தேடி வரும் கோடான கோடி கூட்டத்திற்கு ஹித்மத் செய்து வாரும் , அவர்களது குறையை போக்க " யா காதிர் முராது ஹாசில் " என கூறும் , அவர்கள் முராது ஹாசிலாக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் மன்றாடி கேட்பேன். எல்லாம் வல்ல அல்லா நிச்சயம் அன்னாரின் முராதுக்களை ஹாசிலாக்கி கொடுப்பன். நீரும் உமது சந்ததியினரும் அவர்கள் தரும் காணிக்கைகளை உண்டு வாரும் அதில் பெரும் பரக்கத்தை எல்லாம் வல்ல அல்லா கொடுப்பான் என்றார்கள்.

ஒரு வேலை நீர் சலாம் சொல்லி பதில் வரவில்லை என்றால் அன்றைய தினம் இன்னொரு பெரியார் என்னை ஜியாரத் செய்து கொண்டு இருப்பார், நீர் அவரை பின் தொடர்ந்து சென்று விளியும், அவர் உமக்கு வேண்டிய உதவிகளை செய்வார் அவரே ஹிளுறு ( அலை ) என்றார்கள். 

No comments:

Post a Comment