Pages

Friday, June 8, 2012

பல் குச்சியை துளிர் விட செய்த பால நாயகத்தின் இறை வலிமை


பல் குச்சியை  துளிர் விட செய்த பால நாயகத்தின் இறை வலிமை 

ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் தம் மைந்தருடன் பல நாடுகள் சுற்றி பல முன்னோர்களை தரிசித்தார்கள். இராக் நாட்டிலுள்ள பக்தாத்துக்கும், ஹஜ்ரத் ஹுசைன் ( ரலி ) உயிர் நீர்த்த கர்பலாவிர்க்கும் போனார்கள். துர்சின மலையில் தவம் இருந்த பின் கன்ஆன் ( கானா ) தேசம் போய் முன்னோர்கள் பலரின் தரிசனம் பெற்று, பின் துருக்கி சென்று இஸ்தான்புல், கிஷ்கந்திநீயா ( கான் ஸ்டாண்டி நோபிள் ) போய் ஆப சூபியா எனும் பள்ளி வாசலில் தங்கினார்கள். சென்ற இடமெல்லாம் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்கள்.பின்பு குவைத் நகரம் போய் சில நாட்கள் தங்கினார்கள்.  

ஒரு நாள் தன் மைந்தனான அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்களை தன் பக்கம் அழைத்து. அருமை மகனே தான் உனக்கு அடையாளமாக கொடுத்த பல் துலக்கும் குச்சியை நாட்டுவித்து தவமிருக்கும் படியும் அக்குச்சி துளிர்த்தால் ஆண்டவன் உம தவத்தை ஏற்று கொண்டதகா பொருள் என்று கூறியதும் அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்கள் அப்படியே நாற்பது நாள் வணங்கி அக்காய்ந்த குச்சியை துளிர் விட செய்தார்கள்.

தம் மைந்தனின் தவ வலிமையை மெச்சிய ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் , தன் மைந்தனுக்கு முஷஹதா , முரகபா, முஆயினா, முகாஷபா ஆகிய ஞான இரகசியங்கள கற்று கொடுத்தார்கள்.      
பின்பு  அவரை தம் பிரதிநிதி ஆக்கினார்கள். மகனே எனக்கு பிறகு நீர் என் ஸ்தானத்தில் இருப்பர் என்றார்கள். ஹஜ்ரத் நாகூர் ஆண்டகையின் மாணவர்களோ அருமை நாயகம் ஹஜ்ரத் செய்து முஹம்மது யூசுப் சாஹிப் அவர்களை தங்களது தலைவராகவே ஆக்கினார்கள்

இதன் பின் ஏடன் நகரம் போய் சில காலம் மார்க்க சேவை புரிந்து அங்கிருந்து துருக்கி சென்றார்கள். அந்நாட்டின் தலை நகரின் உள்ள ஹாஜியா சோபியா பள்ளிவாசலில் மார்க்க சொற்பொழிவு ஆற்றினார்கள். அங்கு நப்சை ( இச்சையை ) அடக்கும் முறை பற்றியும் தவிர்க்க கூடியதையும் , ரிஜ்சக் அளிப்பவன் ஆண்டவன் அவனை அன்றி அந்த உணவு நமக்கு கிடைப்பதில் சாத்தியமே இல்லை என்ற அகீகத்தை பற்றியும் இறைவணக்கத்தை பற்றியும் தெள்ள தெளிவாக விவரித்து பயான் செய்தார்கள்.  பின்னர் அங்கிருந்து கிளம்பி  மீண்டும் மக்கா போய் சேர்ந்தார்கள். 

No comments:

Post a Comment