குவாலியர் குருநாதரின் மனைவியின் ஆசை
நாகூர் நாயகத்தின் பெருமையை தனது கணவரிடமிருந்து அறிந்த
குவாலியர் எஜமானின்
மனைவிக்கு மனிதில்
ஒரு ஆசை. தனது மகளை ஆண்டகைக்கு மணமுடித்து தர வேண்டும்
என விருப்பம். எனவே ஆண்டகையின் மனமறிந்து வர நடுத்தர வயது கடந்த இரு பெண்மணிகளை அனுப்பி
வைத்தார்கள்.
குருநாதரின் மனைவியின் என்னத்தை புரிந்து
கொண்ட நாகூர்
ஆண்டகை புன்னைகைத்தார்கள்.
ஒவ்வொரு தானியத்திலும் அதை உண்பவனின் பெயர் அல்லாஹ்வால் எழுதப்பட்டு இருக்கும்,. அதை உங்களால் அறிந்து
கொள்ள முடியுமா
? நான் இப்படி கேட்டதாக உங்கள்
எஜமானியிடம் தெரிவியுங்கள் என்று கூறினார்.
தானியத்தில் பெயர் எழுதியது போல பெண்ணுக்கு தனது கணவன் இன்னவன்
என இறைவன்
ஏற்கனவே தீர்மானித்து இருப்பான். உங்கள்
பெண்ணை நான் மணக்கும் படி இறைவன் நாட்டமில்லை என்பதை நான் அறிவேன் என்ற ஆண்டகையின் சிலேடை
சொற்கள் கருத்து
மூல தெரிந்து
குருநாதரின் மனைவி மிகவும் வருந்தினார்.
இச்சம்பவத்தை கேள்வியுற்ற குவாலியர் நாயகம்
அவர்கள் தம் மனைவியாரை கடிந்து
கொண்டார்கள். என்னை கேளாமல் ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகையை
எப்படி தொந்தரவு
செய்தீர்கள் ? இனி அப்படி
நடக்க கூடாது
என கண்டித்து எச்சரித்தார்கள்.
No comments:
Post a Comment