Pages

Friday, June 8, 2012

இறந்த மான் குட்டி மீண்ட அதிசயம்


இறந்த மான் குட்டி மீண்ட அதிசயம் 

நாற்புறமும் மரங்கள் அடர்ந்த காட்டில் ஹஜ்ரத் நாகூர் அப்துல் காதிர் ஷாகுல் ஹமீத் ஆண்டகை அவர்கள் நடந்து செல்லும் போது துள்ளி திரிந்த இரண்டு மான் குட்டிகளை ஓநாய்கள் தூக்கி சென்றதையும் அதனால் அதன் தாய் மான் கவலையில் இருப்பதையும் அதன் கண்ணீரில் அறிந்த நாயகம் அவர்கள் அந்த தாய் மான் மீது இறக்கம் கொண்டு மான் குட்டிகளை ஓநாய் கொன்று தின்ற இடத்தை பார்த்தார்கள். ஒரு கால் குளம்பை தவிர மற்றதை எல்லாம் அந்த ஓநாய் தின்று இருந்தது. அக்குளம்பை தனது மேற் போர்வையால் போத்தி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ கேட்டார்கள். போர்வைக்குள் இருந்து மான் குட்டிகள் துள்ளி குதித்து எழுந்து தனது தாயிடம் சென்றன. தாய் மான் தனது குட்டி தானா என்று முகர்ந்து தனது குட்டிகளுக்கு பால் கொடுத்தது. தாயிடம் சேயை சேர்த்த கருணை நாயகம் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி கூறினார்கள்.

No comments:

Post a Comment