கருகிய திருமண பந்தல்
ஒரு நாள் மார்க்க சொற்பொழிவு முடித்து தன் வீட்டிற்கு ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை
அவர்கள் திரும்பினார்கள். தன் வீட்டு வாயிலில்
பந்தல் போடப்பட்டு வீட்டில் உள் / முன் சொந்த பந்தங்கள் நிற்பதை
கண்டார்கள். வீட்டு
உன் சென்று
அன்னையாரிடம் என்ன விஷேசம் என வினவினார்கள். அருமை அன்னையோ.. மகனே..
இன்று நாம் உமக்கு திருமணம்
செய்ய இருப்பதாக கூறினார்கள். திகைபுற்ற ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை
அவர்கள் - இறைவன் நாட்டத்திற்கு விரோதமாய் என்னை நடக்க சொல்கிறீர்களா ? என கேட்டவாறு மனப் பந்தலை
நோக்கினார்கள். சட சடவென பந்தல்
தீ பற்றி எரிந்தது.. பின்னர் ஹஜ்ரத்
நாகூர் ஆண்டகை
அவர்கள் அமைதியாக
தமது பெற்றோரை
நோக்கினார்கள். எனதருமை
பெற்றோரே நான்கு
சுவர்களுக்கு நடுவில்
ஒரு குறிப்பிட்ட பந்தத்துக்குள் வாழ கூடியவனாய் என்னை எல்லாம் வல்ல அல்லா படைக்கவில்லை. இந்த பரந்த உலகிற்கு என்னை சொந்தமாக்கியுள்ளான். அந்த நாட்டத்தை மணப்புர்வமாக
ஏற்று கொண்டு
இறை இல்லமான
பைத்துல்லாவை சந்திக்க
எனக்கு விட தாருங்கள் என வேண்டி குடும்பத்தார் அனைவரிடமும் பிரிய விடை பெற்று
மீதமுள்ள சீடர்களும் புறப்பட்டார்கள். பெற்றோர்கள் கண்ணீர் மல்க தமது மகனின்
மனமறிந்து ப்ரியா
விட கொடுத்து
அனுப்பினார்கள்.
No comments:
Post a Comment