Pages

Friday, June 8, 2012

பைஅத்


பைஅத்

ஒரு நல்ல நாளில் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி தமது குர்விடம் "பைஅத்" செய்து மார்க்க அருள்ஜான தீட்சை பெற்று கொண்ட ஹஜ்ரத் நாகூர் ஆண்டவர் அவர்கள் இடையுறாத இறை வணக்கத்திலும், மெய்ஞ்சான சிந்தனையிலும், மார்க்க போதனையிலும் இருந்து வந்தார்கள். நாட் கணக்கில் வார கணக்கில் மாத கணக்கில் முஷஹதாவில் இருக்கும் ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் அறைக்கு ஒரு வெள்ளிகிழமை அன்று மிர்றிக் என்ற பணியாளருடன் குவாலியர் எஜமான் அவர்கள் நுழைந்தார்கள். உடை தரையில் வீற்றிருக்க " ரிஜாலுள் கைப் " என்ற புவன சுவானத்தில் நாகூர் ஆண்டகை சஞ்சரித்து மகிழ்வதை தம் அறிவுகன்னால் கண்டு பூரித்தார்கள். 

ரிஜாலுள் கைப் அனுபவத்தில் பல நபிமாரையும் வலிமாரையும் நாகூர் ஆண்டகை கண்டு உரையாடினார்கள், தனது பாட்டனாரான ஹஜ்றது கவுதுள் அஹ்லம் செய்தின அப்துல் காதிரி ஜீலானி அவர்களை சந்தித்து மிக்க மரியாதையுடன் பேணி நின்றார்கள். அல்லாஹ்வின் பேரருள் ஜோதியான ஹஜ்றது கவுதுள் அஹ்லம் செய்தின அப்துல் காதிரி ஜீலானி அவர்கள் தனது பேரரை அருகே அழைத்து கொண்டு நெற்றியிலே முத்தமிட்டு அன்னாரின் இதயத்தில் மெய்ஜான விரிகதிரை ஏற்றி வைத்தார்கள். பின்னர் உலகின் பலதரப்பட்ட  மாபெரும் வலிமார்கள் தன பின்னல் நிற்க நாகூர் ஆண்டகை அவர்கள் இமாமாக தொழுகை நடத்தினார்கள். தொழுகை முடிந்ததும் ஹஜ்றது கவுதுள் அஹ்லம் செய்தின அப்துல் காதிரி ஜீலானி அவர்கள் அருகே அழைத்து, அன்பு பேரரே, எம் பெருமானார் முஹம்மது நபி ( ஸல் )  திருபாதம் எம் தோலிலும் எமது பாதம் உமது தோலிலும் உமது பாதம் இப்பூவுலகில் உள்ளம் புண்ணிய சீலர்களின் தோலிலும் இருக்குமாறு இறைவன் ஆக்கியுள்ளான் என கூறிவிட்டு மற்ற வலிமார்களுடன் தமது இருப்பிடம் கிளம்பினார்கள். அதன் பின் ஹஜ்ரத் ஹிளுறு ( ஸல் ) தோன்றினார்கள். ஷாகுல் ஹமீதே , உலக முடிவு வரை இறைவன் உங்களை மெய்ஜான வீட்டின் அணையா விளக்காய் செய்து இருக்கிறான் " என உணர்த்தி மறைந்தார்கள்.

தான்கண்ட இந்த காட்சி பற்றி குவாலியர் நாயகம் அவர்கள் தனது சீடர்கள் முன் விவரித்த போது, பலருக்கு பய பக்தி ஏற்பட்டுயிருப்பினும் சிலருக்கு நாகூர் நாயகம் மீது அசுயை உண்டாயிற்று. நாமும் வலிமார்தானே, விடாது வணக்கங்கள் புரிபவர்தானே, தங்கள் குருஅனாவசியமாய் சாகுல் ஹமீதுக்கு அதிக முக்கிய துவம் தருவது என் என புலம்பினார்கள்.

புலம்பலை கண்ட குவாலியர் நாயகம் அவர்கள் , சீடர்களின் மனமறிந்து அவர்களுக்கு உண்மையை விளக்கினார்கள். சீடர்களே. இந்த வையத்திற்கு ஒரு சூரியன் ஒரு சந்திரன் தான் இருக்குமென்பதை மறந்துவிடாதீர்கள். அத்தனை ஆறுகளும் குளங்களும் கடலுக்கு சமம் ஆகாது. ஹஜ்ரத் சாகுல் ஹமீதின் சகவாசம் நெருங்கியுள்ள ஒவ்வொருவரையும் புனிதபடுத்தும் காலம் காலமாய் கற்க கூடிய வேதாந்த உண்மைகளை அவரது பர் பார்வை உணர்த்தி வைக்கும் , அல்லாஹ்வின் பேரருள் பொக்கிஷமான அவரது ஜோதியால் உலகத்தின் இருள் திரைகள் கிழிபடபோவதை பொறுத்து இருந்து பார்ப்பீர்கள். நண்பர்களே இப்படி எல்லாம் நீங்கள் அவசரப்பட்டுவிட கூடாது என்பதால் தான் அவரது வருகைக்கு முன்பே அந்த பெருமகனின் சிறப்பை உங்களுக்கு உணர்த்த முயன்றேன் " என்றார்கள்

அதன் பிறகு நாகூர் ஆண்டகைகளிடன் புலம்பிய சீடர்கள் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டனர் என "மல்ஹுமிஸ் ஷரிப்  " என்ற நூலில் காணப்படுகிறது.

No comments:

Post a Comment