Pages

Friday, June 8, 2012

மைந்தன் மேல் உள்ள பாசம்


மைந்தன் மேல் உள்ள பாசம்

ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள் நாகூரில் இருபத்தி எட்டு ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்கள். இந்த காலத்தில் நடைபெற்ற கிராமத்துகளும் அற்புதங்களும் ஏராளம். பெற்றோருடன் பதினெட்டு வருடம் , குரு குவாலியர் நாதரோடு பத்து வருடம்,  தேச சஞ்சாரத்தில் பன்னிரண்டு வருடம் ஆக மொத்தம் அறுபத்திஎட்டு ஆண்டுகள் இவ்வுலக வாழ்க்கையில் வாழ்ந்தாலும் எம்பெருமானார் ( ஸல் ) தந்த ஷரியத்தில் பிடிப்புள்ளவர்களாய் விளங்கினார்கள்.

தன் மகனார் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யுசுப்விடம் மிகுந்த பாசமாக இருந்தார்கள். தான் அதிகம் நேரம் ஒரு குன்றின் மீது உட்கார்ந்து தியானம் செய்வார்கள். ஒரு சீடர் வினவினர், அந்த குன்றின் மீது தாங்கள் அடிக்கடி உட்கார்ந்து ஓதும் அவசியம் என்னவென ? அதற்க்கு பதில் அளித்த ஹஜ்ரத் நாகூர் ஆண்டகை அவர்கள், பின்னலில் என்னை தரிசிக்க வருபவர்கள் இந்த குன்றை தரிசித்துவிட்டுதான் என்னை தரிசிக்க வருவர், இது எனது மகனாரின் இடமாகும். என கூறினார்கள். எவ்வளவு பிரியம் இருந்தால் தன் மகனாரை தரிசித்துவிட்டு தன்னை நோக்குவர் என கூறியிருப்பார்கள். அந்த குன்று தான் இன்று ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் நாதா அடங்கி இருக்கும் இடமாகும். அவர்கள் வாசலை கடந்துதான் ஹஜ்ரத் நாகூர் நாயகம் தர்பார் இருக்கிறது.

No comments:

Post a Comment