Pages

Friday, June 8, 2012

ஆசிரியர் உரை ..


                      பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

ஆசிரியர் உரை ..

யா காதிர் முராத் ஹாசில் !!


எல்லா புகழும் இறைவனுக்கே.. இணை துணையற்ற எல்லாம் வல்ல ரஹ்மானின் நாட்டப்படியும் , அல்லாஹ்வின் ஹபீபும் நமகெல்லாம் ரசூலும் எனது பெரும் பாட்டனாராகிய ஹாத்திமுல் அன்பியா,  உலகின் இறுதி நாளில் நம்மை எல்லாம் காத்து ஷபாஅத்து செய்து காப்பாற்ற போகும் என் குல கோமான் முஹம்மது நபி ( ஸல் ) அவர்களை புகழ்ந்தும் , அன்னாரின் தோழர்கள் அனைவரையும் புகழ்ந்தும் , அன்னார் கிளையில் வந்த ஹஜ்ரத் இமாம் ஹசன் ( ரலி ), ஹஜ்ரத் இமாம் ஹுசைன் ( ரலி ) அவர்கள் குல வழியில் தோன்றிய செய்குல் அக்ரம் ஹஜ்ரத் செய்தின கெளத்துல் அஹ்லம் செய்யது அப்துல் காதிர்  முஹையதீன் ஜீலானி பக்தாதி ( ரலி ) துவா பரக்கத்தை கொண்டும் மற்றுமுள்ள ஏனைய குதுபுமார்கள், நாதாக்கள், அன்பியாக்கள், அவ்லியாக்கள் துவா பரக்கத்தை கொண்டும், கருனைகடல் இமாமுல் அவ்லியா, தாஜுல் அஸ்பியா செய்தினா செய்யது அப்துல் காதிர் சாகுல் ஹமீது சாஹிப் காதிரி , காதிர்வலி கண்ஜெசவாய், கஞ்சபக்ஸ் நாயகத்தின் அருளை கொண்டும் அன்னாரின் தவப்புதல்வர் ஹஜ்ரத் சுல்தானுல் ஸாலிஹ், சுல்தானுல் ஆரிப், சுல்தானுல் மஷாயிகு, ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் காதிரி ஆரிபில்லாஹ் அவர்களின் அருளை கொண்டும் எனது பாட்டனார் சாஹிப்ஜாதா ஹஜ்ரத் செய்யது மக்தும் கலிபா சாஹிப் காதிரி சத்தாரி மற்றும் எனது தந்தை ஹஜ்ரத் செய்யது காமில் சாஹிப் காதிரி சத்தாரி அவர்களின் ஆசிர்வாதத்தோடு இந்த கட்டுரையை தொடங்குகிறேன். 

எனது பாட்டனார் இமாமுல் அவ்லியா, தாஜுல் அஸ்பியா செய்தினா செய்யது அப்துல் காதிர் சாகுல் ஹமீது சாஹிப் காதிரி , காதிர்வலி கண்ஜெசவாய், கஞ்சபக்ஸ் நாயகத்தை பற்றி ஒரு சில புத்தகங்கள் வந்து இருந்தாலும் அவை எல்லாம் ஒரு சில மொழிகளில் மட்டுமே வந்துள்ளது. உலகெங்கும் உள்ள பல தரப்பட்ட மொழியில் இதனை வெளியிட வேண்டும் என சிறிய அவாவினினாலும் எனது பாட்டியார் ஹாஜியா செய்யது ஜொஹரா பீவி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது பாட்டியரால் எனக்கு சொல்லி காட்டப்பட்ட எனது பாட்டனாரின் பல குறிப்பு வாழ்க்கை முறைகளை,  பலதரப்பட்ட ஏடுகளில் சேகரித்து / நானே எழுதி / தொகுத்து வழங்கும் ஒரு சிறிய முயற்சியே இது. மூதாதையரின் பங்களிப்பு வருங்கால தலைமுறைக்கு கட்டாயம் நிச்சய தேவை, நம்மில் பலர் அறிந்திராத அதிசியங்கள் நாதாவின் வாழ்க்கையிலே.. அறிந்த்ததை பகிர்ந்து கொள்ளவே இந்த ஒரு சிறிய முயற்சி.. 

காலங்கள் மாறுகின்றன.. காட்சிகள் மாறுகின்றன.. கருணை உள்ளம் தொடர்கிறதே.. கருணை கடல் தொடர்கிறதே.. கருணை நாதாவின் கராமத்தும் தொடர்கின்றன..  தெரிந்ததை அறிந்ததை புரிந்ததை பகிர்ந்ததை படித்ததை கேட்டதை கேள்விப்பட்டதை சிறுக சிறுக சேகரித்து என் முதல் முத்து மணி மாலையாக இந்த நூலின் வடிவம் தொகுத்தளித்துள்ளேன்.

ஹதீசுகள் மேற்கோள் காட்டி எழுத நான் ஒன்றும் முற்றும் அறிந்த மவுலவிமார்கள் அல்ல.. புழமையில் பொருளுடைத்து பேச நான் தமிழ் கவி நாதரும் அல்ல... காருண்யா ஜோதி நாகூர் நாதவின் / மானிக்கபூரின் மாணிக்கத்தின் / எம் பாட்டரனரின் புகழ் பாட நினைத்த  ஆயிரனக்கனக்கான பேரர்மார்களின் உள்ளத்தில் உள்ள ஆசையை ஒரு சிறு துளியாய் வெளிபடுத்திருக்கும் ஒரு பேரனின் வெளியீடு. என் மனதுள் நீண்ட நாளாக புதையுண்டு கிடந்த ஆவலை (பொக்கிஷமாக) இந்த புத்தகமாக வெளியிடுவதில் மட்டட்ட மகிழ்ச்சி.. 

நான் எழுதியுள்ள இந்த நூலில் சிறு / பெறு தவறு இருந்தால் எல்லாம் வல்ல இறைவனும் எம் பாட்டனார் எம் பெருமான் முஹம்மது நபி ( ஸல் ) , முஹையதீன் அப்துல் காதிர் ஜீலானி ( ரலி ) , கருனைகடல் இமாமுல் அவ்லியா, தாஜுல் அஸ்பியா செய்தினா செய்யது அப்துல் காதிர் சாகுல் ஹமீது சாஹிப் காதிரி , காதிர்வலி கண்ஜெசவாய், கஞ்சபக்ஸ் ( ரலி ) அவர்களும்  இதை படிக்கும் தாங்களும் மன்னித்து அருள வேண்டுகிறேன். 

கருனைகடல் இமாமுல் அவ்லியா, தாஜுல் அஸ்பியா செய்தினா செய்யது அப்துல் காதிர் சாகுல் ஹமீது சாஹிப் காதிரி , காதிர்வலி கண்ஜெசவாய், கஞ்சபக்ஸ் , நாகூர் ஆண்டகை நாயகத்தின் அருள் மழையில் நினைந்த பக்த கோடிகள் ஏராளாம். அதில் தாராள மனம் கொண்ட எத்தனையோ கோடிகளில், எனது நண்பர் _________ அவர்கள் இந்த நல்ல நூலை தனது பொறுப்பில் எடுத்து கொண்டு தனது சொந்த செலவில் வெளியிட்டார், அன்னாரின் குடும்பத்துக்கு எல்லாம் வல்ல அல்லா சகல சவ்பாக்கியத்தையும் தந்தருளுவானாக ஆமீன். மேலும் இதைனை மொழி மாற்றி / பெயர்த்து கொடுத்த எனது அன்பர் ______ அவர்கள் குடும்பத்தினருக்கும் எல்லாம் வல்ல அல்லா சகல சவ்பாக்கியத்தையும் தந்தருளுவானாக ஆமீன். மேலும் இதைனை இதனை அச்சிட்ட / எழுத்து பிழையை சரி செய்த ________ பிரிண்டர்ஸ் நிர்வாகத்திற்கும் நன்றி கூறி இந்த வரலாற்று கட்டுரைக்குள் உங்களை அழைத்து செல்கிறேன்...

இவ்வுயர்ந்த பணியின் நற்கூலியை எனது உடலுயிர் அனைத்துக்கும் சொந்தமான எனது பாட்டனார் சாஹிப்ஜாதா ஹஜ்ரத் செய்யது மக்தும் கலிபா சாஹிபிற்க்கும், எனது சகோதரி செய்தா தாஹிரா அவர்களின் ருஹூக்கு அளிக்குமாறு எல்லாம் வல்ல நாயனை பிரார்த்திக்கிறேன். 

ப்ரியமுடன்.
செ மு கலிபா சாஹிப் காதிரி 


பின் குறிப்பு : இன்னமும் இந்த புத்தகம் முழுமை அடையவில்லை. இன்னும் பல வேலைகள் முடிக்கபடாமல் இருக்கின்றன , குறிப்பாக எழுத்து பிழை சரி செய்தல் , வாக்கியம் அமைத்தல் , மேற்கோள் விளக்கம் , வார்த்தை விளக்கம், மதிப்புரை மற்றும் பலதரப்பட்ட வேலைகள் முழுமையடாமல் இருப்பதால் முழுமையடைந்தபின் புத்தக வடிவில் வாங்கி படிக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.




யா காதிர் முராத் ஹாசில் !!



No comments:

Post a Comment